இன்றைய கால கட்டத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பிகிறார்கள். சாப்பிட வெளியே வாங்குவற்கு பதிலால, வீட்டிலே செஞ்சு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும். ஈஸியாக, வீட்டில் இட்லி, தோசைக்கு வைத்திருக்கும் மாவிலே, 10 நிமிடத்தில் பக்கோடாவை ரெடி செய்துவிடலாம். அதற்கான செய்முறையை இங்கே காணலாம்.
தேவையான பொருள்கள்
- இட்லி மாவு 1 கப்
- 2 நீளமாக நறுக்கிய வெங்காயம்
- கருவேப்பிலை
- மல்லியிலை
- பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- மிளகாய் தூள்
- சீரகம்
செய்முறை
முதலில் ஒரு கப்பில் கட்டியான இட்லி மாவு எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பு: மாவு புளித்திருந்தாலும், புளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை
அடுத்து, 2 வெங்காயத்தை நீளமாக கட் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, மல்லியிலை, கறிவேப்பிலை சேர்த்துகொள்ள வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறுதியா, கொஞ்சம் மிளகாய் துள் சேர்க்கலாம். குறிப்பு: காரம் அதிகம் விரும்பாதோர், இந்த ஸ்டெப் தவிர்த்துவிடலாம்.
சுவைக்காக சீரகம் கடைசியாக சேர்த்துக்கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது. பின்னர், மாவை நன்கு மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
அடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஒரளவு சூடானபிறகு, மாவை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போட வேண்டும். பக்கோடா நிறம் வந்ததும், எண்ணெயில் திருப்பி போடனும். உடனடியாக பக்கோடாவை திருப்பிபோட்டால், ஒன்றுக்கு ஒன்று ஓட்டிக்கொள்ளும். அதனால் வெயிட் செய்து நிறம் வந்ததும் மாற்றி போட வேண்டும்.
அவ்வளவு தான், சுவையான மாலை ஸ்னாக்ஸ் ரெடி. இதை தனியாகவோ அல்லது சட்னி கூடுவோ வைத்து சாப்பிடலாம்.