ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா சி.இ.ஓ ஷெரில் பதவி விலகல்: மார்க் ரியாக்சன் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியாக 14 ஆண்டுகள் பணிபுரிந்த ஷெரில் சாண்ட்பெர்க் பதவி விலகுகிறார்.

இது ஒரு பெரிய அதிர்ச்சி என்றும், தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தனது நெருங்கிய ஒருவரை இழக்கும் நிகழ்வும் என்றும் கூறப்படுகிறது.

ஷெரில் சாண்ட்பெர்க் விலகல் குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில் மிகவும் உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்-ஐ வீழ்த்த முடியுமா..? டிவிட்டரை வைத்து மாஸ்டர் பிளான் போடும் எலான் மஸ்க்..!

ஷெரில் சாண்ட்பெர்க்

ஷெரில் சாண்ட்பெர்க்

52 வயதான ஷெரில் சாண்ட்பெர்க், சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் சமூக ஊடக சவால்களையும் எதிர்கால கடுமையான போட்டியையும் அவர் எதிர்கொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி கொண்டிருந்த நிலையில் அவரது வெளியேற்றம் மிகப்பெரிய பின்னடைவு என கூறப்படுகிறது.

மெட்டா சி.இ.ஓ

மெட்டா சி.இ.ஓ

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் குழுவில் சாண்ட்பெர்க் தொடர்வார் என்றாலும், சாண்ட்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தலைமை இயக்க அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ராஜினாமா
 

ராஜினாமா

“இன்று, நான் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்டாவை விட்டு வெளியேறப் போகிறேன் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று சாண்ட்பெர்க் மிகவும் சுருக்கமான, மிருதுவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

 நன்றி

நன்றி

மேலும் “கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரியும் பாக்கியத்தைப் பெற்ற மெட்டாவில் உள்ள ஆயிரக்கணக்கான புத்திசாலித்தனமான, அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கூறியுள்ள சாண்ட்பெர்க், ஒவ்வொரு நாளும் என்னை ஒருவர் வழிநடத்தியதால் நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

சாண்ட்பெர்க் விலகல் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘ஷெரிலின் விலகல் தனக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், நிறுவனத்திற்கு மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்றும், அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

 ஜேவியர் ஒலிவன்

ஜேவியர் ஒலிவன்

சாண்ட்பெர்க்கின் ராஜினாமா செய்தாலும் அவருடைய பதவி அப்படியே இருக்கும் என்றும், மெட்டாவின் புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரியாக ஜேவியர் ஒலிவன் பொறுப்பேற்பார் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ள ஆலிவன், சாண்ட்பெர்க் இடத்தை நிரப்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sheryl Sandberg to step down from Facebook parent Meta after 14 years

Sheryl Sandberg to step down from Facebook parent Meta after 14 years |ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா சி.இ.ஓ ஷெரில் பதவி விலகல்: மார்க் ரியாக்சன் என்ன தெரியுமா?

Story first published: Friday, June 3, 2022, 7:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.