10.
தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப் டவுன், 2022 -ல் 1 லட்சம் மக்களில் 66.36 என்ற கொலை விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9.
வடகிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள ஃபோர்டலேசாவின் கொலை விகிதம் 1லட்சம் மக்களில் 69.15 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
8.
பிரேசிலின் வடகிழக்கு முனையில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலத்தின் தலைநகரான நடாலில், 1 லட்சம் மக்களுக்கு 74.67 என்ற கொலை விகிதம் பதிவாகியுள்ளது.
7.
வெனிசுலாவில் பொலிவார் மாநிலத்தில் 2022-ல் 1 லட்சம் மக்களில் 78.3 என்ற கொலை விகிதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
6.
மெக்சிகன் மாநிலமான குவானாஜுவாடோவில் அமைந்துள்ள இராபுவாடோ-வில் 1 லட்சம் மக்களில் 81.4 என்ற கொலை விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குப் பெயர்போன, மெக்சிகோவின், அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான சியுடாட் ஜுவாரெஸ் நகரில் இந்த ஆண்டு 1 லட்சம் மக்களில் 85.56 விகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.
மெக்சிகோவின் வடகிழக்கில் அமைந்துள்ள சியுடாட் விக்டோரியாவில் 1 லட்சம் மக்களில் 86.01 கொலை விகிதமாக பதிவாகியிருக்கிறது .
3.
வெனிசுலாவின் மிகப்பெரிய நகரமான கராகஸில் 1 லட்சம் மக்களுக்கு 99.98 என்ற கொலை விகிதம் உள்ளது.
2.
மெக்சிகன் நகரின் மற்றொரு நகரம் அகாபுல்கோ, இங்கு 1 லட்சம் மக்களில் படுகொலை விகிதம் 110.5 என பதியப்பட்டுள்ளது.
1.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள டிஜுவானா உலகிலேயே அதிக கொலை நடக்கும் நகரமாகும். 2022-ல் கொலை விகிதம் 1 லட்சம் மக்களில் 138 சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.