யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு

Poonamalle court refused to give police custody to Youtuber Karthik gopinath: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் பெயரை பயன்படுத்தி, பல லட்சம் வசூலித்த புகாரில் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் பல லட்சம் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆவடி அடுத்த மிட்னமல்லி பகுதியைச் சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(டி) தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னையில் ஸ்டாலின் காரை முந்த முயன்ற இளைஞர் கைது: திருட்டு டூவீலர் என கண்டுபிடிப்பு

இந்தநிலையில், கார்த்திக் கோபிநாத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரி இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

மனு விசாரணைக்கு வந்தப்போது, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து கார்த்திக் கோபிநாத் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.