நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த, தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு, லண்டன் அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி சுபிக்ஷா, தனது மேற்படிப்பை லண்டனில் தொடர்ந்தார். அவர் படித்து கொண்டு இருக்கும்போதே அந்நாட்டின் அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணி வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் நேற்று மாணவி சுபிக்ஷாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வேதாரண்யம் அடுத்த தென்னடார் கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் பாஸ்கரன்-ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா. இவர் 9ம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்துவிட்டு, கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக லண்டனுக்கு சென்றார்.
லண்டன் யுஎஸ்ஏ-வில் எம்.எஸ் படிக்கும்போதே மாணவி சுபிக்ஷவுக்கு லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்றுள்ளாா்.
இதனையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய மாணவி சுபிக்சாவை சமூக ஆர்வலர்கள், கிராமத்தினா் பாராட்டி வருகின்றனா்.