Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie Review, Movie Launch Today LIVE Updates: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பத்தை புகுத்திய பெருமை பெற்றுள்ள கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் படம் வெளியானது. அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்கிய கமல் சட்டமன்றம் மற்றும் நடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் கமல்ஹாசன், சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் படத்தில் நடத்துள்ளார். கைதி மாஸ்டர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கமல்ஹாசனுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன், ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று (ஜூன் 03) விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வழக்கமான கமல் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், விக்ரம் படத்தை பார்க்க பெண்கள் அதிக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், முதல்நாள் முதல் ஷோ என்று விக்ரம் படத்தை பார்க்க பல திரையரங்குகளில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 4 வருடங்கள் இடைவெளி விட்டாலும் தற்போது வெளியாகியுள்ள விக்ரம் படம் இந்த 4 வருட இடைவெளியை பூர்த்தி செய்துவிடும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“