அசோக் செல்வன் ஜோடி ஆகிறார் மேகா ஆகாஷ்
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகர் யார் என்றால் அது அசோக் செல்வன் தான். ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த அசோக் செல்வன் ‛ஓ மை கடவுளே' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து, அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிசியான நடிகர் ஆகிவிட்டார்.
மன்மதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல் படங்களில் நடித்த அவர் தற்போது வேழம் என்ற படத்தில் நடித்து முடித்திருகிறார். இதில் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் ஹிரோயின், 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தவிர ரா.கார்த்திக் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். இதில் மேகா ஆகாஷ் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார். வருகிற 8ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.