`கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’: வீட்டுக்கே சென்று வழங்கி கௌரவித்த முதல்வர்!

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸூக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தி நகர் இல்லத்தில் நேரில் வழங்கினார்.

தமிழ்த் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, அவர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி பழம்பெரும் இயக்குனரும் வசனகர்த்தாவுமான ஆரூர்தாஸூக்கு, முதல் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

image

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஓய்வு எடுத்து வரும் ஆரூர்தாஸூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.நகரில் உள்ள இல்லத்தில் விருது வழங்கி உள்ளார். முதல்வருடன் துறை அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.நகரில் ஆரூர் தாஸின் மகன் ரவிச்சந்திரன் தனது குடும்பத்துடன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்றார்.

image

1958ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரித்த வாழவைத்த தெய்வம் படத்திற்கு கதை வசனம் எழுதத் தொடங்கிய ஆரூர்தாஸ் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை – வசனம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க… தமிழகத்தில் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள்… மாணவர் சேர்க்கை பேரணிக்கு ஏற்பாடு

கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆரூர்தாஸ் தனித்துவமிக்க ஆனது வசன ஆற்றலால் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்தார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் வரை என பல முக்கிய பிரபலங்களிடம் நட்பு பாராட்டி வந்துள்ளார்.

Image

சத்யபாமா பல்கலைக்கழகம் இவரது திரை சேவையை பாராட்டி 2014 ஆம் ஆண்டு டாக்டர் கௌரவபட்டம் கொடுத்தது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் வருடம் தோறும் ஜூன் மூன்றாம் தேதி வழங்கப்பட உள்ள கலைஞர் வித்தகர் கலை விருதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆரூர்தாஸ் வழங்கினார். மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆரூர்தாசுக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.