#தமிழகம் || தம்பிக்கு கல்யாணம்., அப்போ எனக்கு? கேள்விகேட்ட அண்ணனை அடித்துக்கொன்ற தந்தை.!

தேனி அருகே தம்பியின் திருமணத்திற்கு முந்தைய நாள் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக தந்தையே மகனை அடித்துக் கொலை செய்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவரின் இரண்டாவது மகனுக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அய்யாசாமி என் மூத்த மகன் மூவேந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் அவர் மூத்த மகன் திருமணம் ஆகாத விரக்தியில் தூக்கில் தொங்கியதாக தெரிவித்த அய்யாசாமி, அவரின் உடலை அவசரஅவசரமாக இறுதி சடங்கு, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதற்கிடையே மூவேந்தன் தலையில் பலத்த காயம் இருந்ததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அய்யாசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அய்யாசாமி தனது மகனை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், மூவேந்தன் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்காமல், தம்பிக்கு திருமணம் செய்து வைப்பது ஏன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் மூவேந்தன் தலையில் அய்யாசாமி தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து அய்யாசாமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.