Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கருணாநிதி பிறந்தநாள்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
Tamil News Today Live
‘விக்ரம்‘ படம் வெளியானது!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதில், நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கைதி’யை மற்றொரு முறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ உலகுக்கு வாருங்கள் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்!
சோனியா காந்திக்கு கொரோனா!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீப நாட்களாக சோனியா காந்தியை சந்தித்த அவரின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஜூன் 8ஆம் தேதி சோனியா காந்தி அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்.. இளையராஜா!
முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர். என் தந்தை எனக்கு ‘ஞானதேசிகன்’ என பெயர் வைத்தார். கருணாநிதி எனக்கு இசையோடு சேர்த்து ‘இசைஞானி’ என பெயர் வைத்தார். அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்தான் கருணாநிதி. தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன்- கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா பேச்சு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ.38,480 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,810க்கு விற்பனையாகிறது.
மூத்த பத்திரிகையாளர் ‘தினத்தந்தி’ சண்முகநாதனுக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது, ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து!
கலைஞர் 99#hbdkalaignar99 ைஞர்99 #kalaignar99 pic.twitter.com/iM7ocjf4IZ
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2022
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Live: பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துதல் https://t.co/sGxu3jDxCQ
— M.K.Stalin (@mkstalin) June 3, 2022
கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை எதிர்த்து பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி இன்று 100வது நாளை எட்டி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 3 நாட்கள் உத்தர பிரதேசம் பயணம் செல்கிறார். கான்பூரில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இன்று பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும், மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின், இன்று தொடக்கி வைக்கிறார். கண்காட்சியை பார்வையிட மாணவர்களுக்கு – ரூ.20, பெரியவர்களுக்கு – ரூ.50 நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.
காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு செய்கிறார். அங்கு அமித்ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால், கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது என தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து அறநிலையத்துறை பதிலளித்துள்ளது.
சென்னையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காரணமாக, தேர்வர்கள் பயனடையும் வகையில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இன்று நடத்த திட்டமிட்டிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.