அச்சுறுத்தல்கள் உள்ளன: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்


பிரிவினைவாதத்தை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் அதன் மறைமுக ஆதரவுக் குழுக்களால் கணிசமான அச்சுறுத்தல்கள் உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரிவினைவாதத்தை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் அதன் மறைமுக ஆதரவுக் குழுக்களால் கணிசமான அச்சுறுத்தல்கள் உண்டு.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில், அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க உதவிகளைப் பெற முனைவது, சமீபத்திய மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளின்மூலம் தெளிவுபடுகிறது.

அச்சுறுத்தல்கள் உள்ளன: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

அத்துடன் சமீபத்தில் அரசிற்கெதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மற்றும் அத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் சட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதை, நிராகரிக்க முடியாது.

பாதுகாப்புக் கொள்கை

மாறிவரும் பாதுகாப்பு சூழலுக்கு இடமளிக்கும் மற்றும் திறம்பட பதிலளிக்கும் ஒரு பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஒரு வலுவான, தகவமைக்கக்கூடிய மற்றும் விரிவான பாதுகாப்புக் கொள்கை கட்டாயமாகக் கருதப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சமூக ஒற்றுமையை சிதைப்பதுடன் நமது சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

அச்சுறுத்தல்கள் உள்ளன: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.