Tamil Serial Pandian Stores Rating Update With promo : ஆரம்பமாகியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த பூகம்பம் இதை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு ஓட்டலாமே என்று சொல்லும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.
சகோர ஒற்றுமை, கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திற்கும் பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது சகோத ஒற்றுமையை தவிர மற்ற அனைத்தும் இருக்கிறதா என்றால இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சகோதர ஒற்றுமையே சற்று ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.
கண்ணன் திருமணத்திற்கு முன்புவரை அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். அதன்பிறகு லட்சுமி அம்மா இறப்பை வைத்து ஒரு மாதம் கடத்தினார்கள். அப்புறம் பாண்டியன் சூப்பர் ஸ்டோர் திறப்பதற்கு தடை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வந்தாலும், அதையெல்லாம் கடந்து சென்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் விட்டதில் இருந்து பிரச்சினை தலையில் சுற்றி வருகிறது.
மூத்த மருமகள் தனம் எல்லாரையும் அனுசரித்து செல்கிறார். 2-வது மருமகள் மீனா எப்பாவது எதாவது பேசினாலும் ஜீவா அவளை ஆஃப் செய்துவிடுகிறார். அடுத்து முல்லை தனத்தின் மறுஉருவம். ஆனால் ஐஸ்வர்யா என்ன ரகம் என்றே தெரியவில்லை. அவரை கட்டிக்கொண்ட கண்ணன் அவனோட முழு சப்போர்ட்டும் ஐஸ்வர்யாவுக்குதான்.
இதில் ஐஸ்வர்யாவுக்கும், மீனாவுக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆனாலும் ஐஸ்வர்யா இடத்திற்கு தகுந்தார்போல் தன்தை மாற்றிக்கொள்வதில் சமயோஜித புத்தி உள்ளவர். முல்லைக்கு ட்ரீட்மெண்ட் பண்ண பணம் கொடுத்த போது மீனாவுடன் இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் மீனா வீட்டில் சண்டை போடும்போது வீட்டார் பக்கம் நிற்கின்றார்.
ஒற்றுமைக்கு பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது பெயரளவில் கூட ஒற்றுமை இல்லையே என்று வருத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளார் ஜனார்த்தன். முல்லைக்கு ட்ரீட்மெண்ட் பண்ணப்போ கடன் வாங்குன பணத்தை கடன்காரர் திரும்ப கேட்க அப்போது ஜீவா மீனாவிடம் இருந்து அவரது அப்பா கொடுத்த பணத்தை வாங்கி வந்து கொடுக்கிறார்.
இதை தெரிநதுகொண்ட ஜனார்த்தன் உங்க தம்பி மனைவிக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த பணத்தை அவர்தான் கொடுக்கனும் அதை நீங்க ஏன் கொடுக்கனும் என்று சத்திய மூர்த்தியிடம் கேட்க, இதை கேட்டு ஐஸ்வர்யாவின் சித்தி முல்லையிடம் சொல்ல தற்போது குடும்பத்தில் அடுத்த பூகம்பம் ரெடியாகிவிட்டது என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“