55 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முதல்வர் வெற்றி| Dinamalar

டேராடூன்: சம்பாவத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தமி, 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய புஷ்கர் தமி தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர் முதல்வராக நீடிப்பதற்கு 6 மாதத்தில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற வேண்டும். இதனையடுத்து சம்பவத் தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.

அதில் புஷ்கர் தமி, 58,258 ஒட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா ககடோடி 3,233 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். வெற்றி பெற்ற புஷ்கர் தமிக்கு, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.