தங்கம் விலை எப்போதும் லாபத்தை மட்டுமே அளிக்காது சில எதிர்பாராத வேளையில் தங்கம் விலை குறையும் போது தங்கம் மீதான முதலீடு நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் நீண்ட காலச் சேமிப்புக்காக வாங்கும் தங்கத்தை இப்போது வாங்குவது சரியா..?
NEFT, RTGS-ல் பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
தங்கம் விலை
சர்வதேச பொருளாதாரப் பாதிப்புகள் தங்கம் விலையைத் தடுமாறச் செய்கிறது என்றால் மறுக்க முடியாது, பணவீக்கம் அதிகரிப்பாலும், தொடர் வட்டி விகித உயர்வாலும் அதிகளவிலான முதலீடுகள் பத்திர சந்தையில் குவிய துவங்கிய நிலையில் தங்கம் விலை சரிந்தது. இது ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான பலனை அளித்தது என்றால் மிகையில்லை.
பணவீக்க பாதிப்புகள்
இதனால் பணவீக்க பாதிப்புகள் கணிசமாகக் குறைந்து வட்டி உயர்வின் வேகத்தில் சிறிய அளவிலான தொய்வு ஏற்பட்டு பின்பு பத்திர சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடுகள் தங்கம் மீது திரும்பத் துவங்கிய காரணத்தால் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியது.
வேலைவாய்ப்புத் தரவுகள்
இன்று அமெரிக்கச் சந்தையில் வேலைவாய்ப்புத் தரவுகள் வெளியாகும் காரணத்தால் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் சிறப்பான முதலீட்டைப் பெற்று வருகிறது. இதனால் தங்கம் மீதும் அதிகப்படியான முதலீடு பெற்று இதன் விலை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சர்வதேசச் சந்தையுடன் சேர்த்து இந்தியச் சந்தையிலும் உயரத் துவங்கியுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1852 டாலரில் இருந்து இன்றைய வர்த்தகத்தில் 1872 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மணிநேர வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 10 டாலர் குறைந்து தொடர்ந்து 1862 டாலர் அளவிலேயே உள்ளது.
MCX சந்தை விலை
இதன் தாக்கம் இந்திய MCX சந்தையில் அப்பட்டமாக வெளிப்பட்டு உள்ளது, காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடனே உள்ளது. 11.30 மணியளவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் அதிகரித்து 51,348.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.58 சதவீதம் அதிகரித்து 62,698.00 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலையில் தடுமாற்றம்
பணவீக்கம் அளவுகள் குறையும் வரையிலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி உயர்வை நிறுத்தும் வரையில், டாலர் இன்டெக்ஸ் 100 புள்ளிகள் தொடும் வரையில், கச்சா எண்ணெய் விலை நிலைபெறும் வரையிலும் தங்கம் விலையில் தடுமாற்றம் இருக்கும்.
நீண்ட கால முதலீடு
இந்த நிலையில் தங்கத்தை நீண்ட கால முதலீடாகக் கருதும் சாமானிய மக்கள் தங்கம் விலை நிலைப்பெற்ற பின்பு அல்லது குறைந்த பின்பு வாங்குவது மூலம் கூடுதலான லாபம் கிடைக்கும். டாலர் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வரையில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி பெரிய அளவில் உயராது, இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும்.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
சென்னை – 48,200 ரூபாய்
மும்பை – 48,100 ரூபாய்
டெல்லி – 48,100 ரூபாய்
கொல்கத்தா – 48,100 ரூபாய்
பெங்களூர் – 48,100 ரூபாய்
ஹைதராபாத் – 48,100 ரூபாய்
கேரளா – 48,100 ரூபாய்
புனே – 48,180 ரூபாய்
பரோடா – 48,180 ரூபாய்
அகமதாபாத் – 48,150 ரூபாய்
ஜெய்ப்பூர் – 48,250 ரூபாய்
லக்னோ – 48,250 ரூபாய்
கோயம்புத்தூர் – 48,200 ரூபாய்
மதுரை – 48,200 ரூபாய்
விஜயவாடா – 48,100 ரூபாய்
பாட்னா – 48,180 ரூபாய்
நாக்பூர் – 48,180 ரூபாய்
சண்டிகர் – 48,250 ரூபாய்
சூரத் – 48,150 ரூபாய்
புவனேஸ்வர் – 48,100 ரூபாய்
மங்களுரூ – 48,100 ரூபாய்
விசாகபட்டினம் – 48,100 ரூபாய்
நாசிக் – 48,180 ரூபாய்
மைசூர் – 48,100 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
சென்னை – 52,580 ரூபாய்
மும்பை – 52,470 ரூபாய்
டெல்லி – 52,470 ரூபாய்
கொல்கத்தா – 52,470 ரூபாய்
பெங்களூர் – 52,470 ரூபாய்
ஹைதராபாத் – 52,470 ரூபாய்
கேரளா – 52,470 ரூபாய்
புனே – 52,550 ரூபாய்
பரோடா – 52,550 ரூபாய்
அகமதாபாத் – 52,530 ரூபாய்
ஜெய்ப்பூர் – 52,740 ரூபாய்
லக்னோ – 52,740 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,580 ரூபாய்
மதுரை – 52,580 ரூபாய்
விஜயவாடா – 52,470 ரூபாய்
பாட்னா – 52,550 ரூபாய்
நாக்பூர் – 52,550 ரூபாய்
சண்டிகர் – 52,670 ரூபாய்
சூரத் – 52,530 ரூபாய்
புவனேஸ்வர் – 52,470 ரூபாய்
மங்களுரூ – 52,470 ரூபாய்
விசாகபட்டினம் – 52,470 ரூபாய்
நாசிக் – 52,550 ரூபாய்
மைசூர் – 52,470 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – 68500.00 ரூபாய்
மும்பை – 62700.00 ரூபாய்
டெல்லி – 62700.00 ரூபாய்
கொல்கத்தா – 62700.00 ரூபாய்
பெங்களூர் – 68500.00 ரூபாய்
ஹைதராபாத் – 68500.00 ரூபாய்
கேரளா – 68500.00 ரூபாய்
புனே – 62700.00 ரூபாய்
பரோடா – 62700.00 ரூபாய்
அகமதாபாத் – 62700.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 62700.00 ரூபாய்
லக்னோ – 62700.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 68500.00 ரூபாய்
மதுரை – 68500.00 ரூபாய்
விஜயவாடா – 68500.00 ரூபாய்
பாட்னா – 62700.00 ரூபாய்
நாக்பூர் – 62700.00 ரூபாய்
சண்டிகர் – 62700.00 ரூபாய்
சூரத் – 62700.00 ரூபாய்
புவனேஸ்வர் – 68500.00 ரூபாய்
மங்களுரூ – 68500.00 ரூபாய்
விசாகபட்டினம் – 68500.00 ரூபாய்
நாசிக் – 62700.00 ரூபாய்
மைசூர் – 68500.00 ரூபாய்
Gold price today June 03: Check price in chennai, coimbatore, madurai
Gold price today June 03: Check price in chennai, coimbatore, madurai தொடர் உயர்வில் தங்கம்.. இப்போது தங்கம் வாங்குவது சரியா..?!