சென்னை:
மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 2021-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன், 1953 ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை பத்திரிகைத் துறையில் பணி புரிந்துவருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்தற்கரிய சாதனை ஆகும்.