துருக்கி நாட்டின் பெயரை மாற்றுவதற்கான ஜனாதிபதி எர்டோகனின் கோரிக்கைக்கு ஐ.நா சபை ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மறுபெயரிடுவதற்கான பிரச்சாரம் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கியது.
சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கப்படுத்த தேசத்தின் பெயரை ‘துர்க்கியே’ என பெயர் மாற்றி அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.
எர்டோகன் இதுதொடர்பான கோரிக்கையை ஐ.நாவிடம் அளித்தார். இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு ஐ.நா ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் துர்க்கியே என மாற்றப்பட்டுள்ளது.
Photo Credit: Picture Alliance
இதுகுறித்து துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவுஸோக்ளு கூறுகையில், ‘ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகள் இந்த மாற்றத்தை துர்க்கியே-வை பயன்படுத்துவதைக் காண்பதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம்’ என தெரிவித்தார்.
மேலும், ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் கூறும்போது, ‘நாடுகள் தங்கள் வழியில் விரும்பும் பெயரை சூட்டிக்கொள்ள சுதந்திரம் உண்டு.
இது தினமும் நடக்கப்போவதில்லை, ஆனால் பெயரை மாற்றிக்கொள்வது என்பது அசாதாரணமானதும் அல்ல’ என தெரிவித்துள்ளார்.