சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளும் அதிக அளவு இயக்கப்படாததால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல முடியாத பயணிகள் செய்வதறியாது தவித்தனர். அரசு இதில் கவனம் செலுத்தி ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM