சியோல்: தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் இல்லை. சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. இருப்பினும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சார்பிக்க வேண்டியது அவசியம் என தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.