Xiaomi Redmi: நீங்கள் சியோமி அல்லது அதன் எதேனும் இணை பிராண்ட் ஸ்மார்ட்போன்களான மி, ரெட்மி போன்ற போன்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், இது உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கலாம்.
ஏனெனில், சியோமி தனது கைவிடப்பட்ட அப்டேட் பட்டியலில் புதிய ஸ்மார்ட்போன்களை சேர்த்துள்ளது. இதன் காரணமாக, பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இனி எந்த விதமான அப்டேட்டும் கிடைக்காது.
நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் Redmi K20, Redmi Note 7 Series, MI Pad ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆகியவையும் அடங்கும்.
21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!
பிரீமியம் போன்கள் சிறந்த ஆதரவைப் பெறும்
Xiaomi உங்கள் சாதனத்திற்கான 2 வருட மென்பொருள் புதுப்பிப்புகளையும் 3 வருடங்கள் வரை பாதுகாப்பு புதுப்பிப்புகளையும், சீனாவிலும் உலக அளவிலும் உள்ள பயனர்களுக்கு வழங்குகிறது. அதன் சில பிரீமியம் போன்களுக்கு நீண்டகால ஆதரவை உறுதியளித்துள்ளது.
இந்த போன்களுக்கு இனி அப்டேட் கிடைக்காது (ஜூன் 2022)
Redmi Note 7Redmi Note 7SRedmi Note 7 ProRedmi K20Redmi 7Redmi Y3Mi Pad 4 PlusMi Pad 4Mi PlayMi 9 SE
6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?
இனி MIUI புதுப்பிப்புகள் இல்லை
இந்த பட்டியலில் இந்தியாவில் கிடைக்கும் Redmi Note 7 தொடர் மற்றும் Redmi K20 ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. ரெட்மி நோட் 7 சீரிஸ் மார்ச் 2019 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi K20 தொடர் இந்தியாவில் ஜூலை 2019 இல் அறிமுகமானது. இந்தச் சாதனம் இனி எந்த MIUI புதுப்பிப்புகளையும் பெறாது. இந்த போன்களின் பீட்டா சோதனையை நிறுவனம் நிறுத்தப் போகிறது.
iPhone 13 Clone: வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ ஐபோனா?
இதற்கு முன்பு சியோமி கைவிட்ட ஸ்மார்ட்போன்கள்
Redmi 1Redmi 1SRedmi 2Redmi 2ARedmi 3Redmi 3SRedmi 3XRedmi 4Redmi 4XRedmi 4ARedmi 5Redmi 5 PlusRedmi 5ARedmi Note 1Redmi Note 1SRedmi Note 2Redmi Note 2 ProRedmi Note 3Redmi Note 4Redmi Note 4XRedmi Note 5Redmi Note 5ARedmi ProRedmi 6Redmi 6 ProRedmi 6ARedmi S2Redmi Y2Redmi Note 6 ProRedmi Go
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
புதிய தொழில்நுட்பங்கள் மீது தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில், பழைய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு நிறுவனங்கள் அப்டேட் வழங்க முடியாது. வருடத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் என்று காலம் மாறிப் போனதும், இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.