தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை இரண்டு வேட்பாளர்களும், திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
மேலும், திமுகவில் இருந்து கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.