பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி “Go Home” கிராமங்களின் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் சந்தேகநபர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (01) சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளளனர்.