இலங்கைக்கு அண்மையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட நன்கொடை பொருட்கள் இன்று (03) அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தோட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தர கமகே தெரிவித்துள்ளார்.
புகையிரதத்தில் ஹட்டனுக்கு கொண்டுசெல்லப்பட்ட உதவி பொருட்க ளை நேற்று (02) ஹட்டன் புகையிரத நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைய நாளை முதல் இந்த உதவி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1 கிலோ பால் மா கொண்ட 4 ஆயிரம் பெட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த பால் மா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.