வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை; பயணிகள் அளவுக்கு மீறி கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்றபடி மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.
Advertisement