சென்னை: பாஜக-வின் வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மேலும் மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு அளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.