Motorola E32s Launch: லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ E32s பட்ஜெட் போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பல நாள்களாக போன் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், மோட்டோரோலா நிறுவனம் தற்போது போனை இந்திய சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்த மோட்டோ போனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பது சிறப்பு. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.
Xiaomi Redmi: இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு இனி அப்டேட் கிடைக்காது!
மோட்டோ இ32எஸ் விலை (Moto E32s Price)
புதிய மோட்டோ இ32எஸ் போனின் 3ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு வேரியண்டின் விலை வெறும் ரூ.8,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வேரியண்டின் விலை ரூ.9,999 ஆக உள்ளது.
ஸ்லேட் கிரே, மிஸ்டி சில்வர் ஆகிய இரு நிறங்களில் இந்த போன் வருகிறது. ஜியோமார்ட், ஜியோமார்ட் டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 60,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து மோட்டோரோலாவின் போனை வாங்கலாம். Moto E32s ஜூன் 6ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!
மோட்டோ இ32எஸ் அம்சங்கள் (Moto E32s Specifications)
மோட்டோ இ32எஸ் ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனை திறனூட்ட ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 (MediaTek Helio G37) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3ஜிபி / 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்துடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை 1TB வரை விரிவாக்கலாம்.
21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!
இந்த மோட்டோ ஃபோன் புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 16-மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/2.2, 2-மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, F/2.0 உடன் 8 மெகாபிக்சல் கேமரா டிஸ்ப்ளே பஞ்ச் துளையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.0, GPS / A-GPS, USB டைப்-சி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளன. கைபேசி பாதுகாப்புக்காக கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் சென்சார் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
இது ஒரு சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் பவர் பேக்கப்பிற்கான 15 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் போன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.