மணந்தால் முதலாளி முருகன் என்ற கொள்கையுடன் கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடைக்குள் பாலியல் புகார் அளித்த பெண் 2 வது நாளாக போராடி வரும் நிலையில் அங்கு பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பெண்ணை வெளியேற்ற கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் தேனி கணபதி சில்க்ஸ் ஜவுளிக் கடையில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகத்தில் வேலைபார்த்த போது ஆசைவார்த்தை கூறி கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் , அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.
அந்தப்பெண் அளித்த புகாரில் முருகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டதால் முருகனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும், கணபதி சில்க்ஸ் கடையில் தனது சொந்த செலவில் அமைத்திருக்கும் அழகு சாதன பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரியும் கடந்த 2 தினங்களாக கணபதி சில்க்ஸ் கடைக்குள் பதாகையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அந்தப்பெண்ணின் போராட்டத்திற்கு போட்டியாக 50க்கு மேற்பட்ட பெண்களை ஒரே வேணில் ஏற்றி வந்த கணபதி சில்க்ஸ் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
பெண் ஊழியர்களை ஆபாசமாகத் திட்டுவதும், தாக்குவதும் மற்றும் தகாத வார்த்தைகளால் வசை பாடுவதும் த ங்களுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பெண் ஊழியர்கள் தெரிவித்தனர்
நீதிமன்றத்தில் அந்த பெண் அளித்த புகார் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ((தொடர்ந்து தொல்லை கொடுக்கும்)) அந்தப்பெண்ணின் மீது போலீசில் பலமுறை அளித்தும், உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்துக்கு வந்ததாக தெரிவித்தனர்.
இந்த போட்டி போராட்டத்தால், தேனி ஆட்சியர் அலுவலக பகுதியில், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.