ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

இந்திய வங்கிகளில் பெண் தலைவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர், அதிலும் குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகள் உயர் மட்ட நிர்வாகக் குழுவில் கூடப் பெண்கள் எண்ணிக்கை குறைவு.

இந்த நிலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவராகப் பெண் ஒருவரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. சென்னையில் என்ன நிலவரம்..!

யூனியன் பேங்க் ஆப் இந்தியா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா

கனரா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஏ.மணிமேகலை என்பவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (MD & CEO) ஆக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவையின் நியமனக் குழு

அமைச்சரவையின் நியமனக் குழு

இந்த நியமனம் தொடர்பான மத்திய நிதி அமைச்சகத்தின் முடிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்ததுள்ளது. இதன் மூலம் ஏ.மணிமேகலை அடுத்த சில நாட்களில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகத் தனது பணியைத் துவங்க உள்ளார்.

மணிமேகலை நியமனம்
 

மணிமேகலை நியமனம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ராஜ்கிரண் ராய் அவரது பதவிக் காலம் மே 31 அன்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மணிமேகலை நியமிக்கப்பட்டு உள்ளார். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராகப் பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

மூன்று வருட காலம்

மூன்று வருட காலம்

மணிமேகலை அவர்களின் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணி காலம் மூன்று வருட காலத்திற்கு இருக்கும். இதைத் தொடர்ந்து பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்புச் செய்யப்படும் அல்லது ஓய்வு பெறும் தேதி வரை நீட்டிக்க முடியும் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவாவை வங்கியின் MD மற்றும் CEO ஆக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 24, 2020 அன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்ற பார்த்த பிரதீம் சென்குப்தா-வுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் & சிந்த் வங்கி

பஞ்சாப் & சிந்த் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனரான ஸ்வரூப் குமார் சாஹா, பஞ்சாப் & சிந்த் வங்கியின் முன்னாள் MD & CEO ஆக இருந்த S கிருஷ்ணன் மே 2022 இல் ஓய்வு பெற்ற நிலையில் ஸ்வரூப் குமார் சாஹா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt appointed MD and CEO for 3 PSU bank in same day

Modi Govt appointed MD and CEO for 3 PSU bank in same day ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

Story first published: Friday, June 3, 2022, 19:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.