WhatsApp Fraud Alert: சமூக ஊடகங்கள் மற்றும் அரட்டை பயன்பாடுகள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. மேலும் பலர் இணைந்திருக்கவும், ஒருவருக்கொருவர் செய்திகளைப் பகிரவும் இதுபோன்ற செயலிகள் அல்லது தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், வாட்ஸ்அப் தான் இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் காணப்பட்ட மோசடி மீண்டும் ஒருமுறை வேறு வடிவத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் வேலிடிட்டி… நம்பினால் நம்புங்கள்!
இதில் பயனர்களுக்கு கவர்ச்சிகரமான செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப்பில், +92 306 037 3744 என்ற எண்ணிலிருந்து லாட்டரியை வெல்ல பயனர்களுக்கு செய்தி அனுப்பப்படுகிறது. குரல் குறிப்பும் அனுப்பப்படுகிறது.
சிறந்த 55″ ஸ்மார்ட் டிவிக்களின் பட்டியல் – விலையும் ரொம்ப கம்மிதான்!
முக்கியமாக, இந்தச் செய்தியை உண்மையாக்க அமிதாப் பச்சனின் புகைப்படங்களையும், ‘கோன் பனேகா குரோர்பதி’ அதாவது கேபிசியின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
செய்தியில் என்ன இருக்கிறது?
இந்த எண்ணில் இருந்து அனுப்பப்பட்ட செய்தியில், உங்களுக்கு ரூ.25 லட்சம் லாட்டரி அடித்ததாகவும், இந்தப் பணம் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, நீங்கள் பணத்தைப் பெற இந்த ‘07666533352’ எண்ணில் அழைக்கலாம். செய்தியுடன் ஆடியோ குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. லாட்டரி பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது எப்படி என்பது இங்கே என்ற இணைப்பும் உள்ளது.
6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?
ஆனால், இது ஒரு மோசடி மற்றும் இந்த செய்திகளுக்கு பதிலளிப்பது உங்களை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலம் இந்த மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்கு விவரங்களைத் திருடுகிறார்கள். மேலும் உங்கள் பணத்தை நீங்கள் இழக்க நேரிடும்.
Xiaomi Redmi: இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு இனி அப்டேட் கிடைக்காது!
கவனமாக இருங்கள்
உங்களுக்குத் தெரியாத எண்ணிலிருந்து செய்தி வந்திருந்தாலோ அல்லது உங்களை ஏமாற்றுவதற்காக இந்தச் செய்தி அனுப்பப்பட்டதாக நீங்கள் நினைத்தாலோ, முதலில் அந்த எண்ணை முடக்கவும்.
இந்தியர் அல்லாத எண்ணிலிருந்து நீங்கள் செய்தியைப் பெற்றால், அதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். முக்கியமாக அந்த எண்ணிற்கு பதிலளிக்க வேண்டாம். தெரியாத இணைப்பைக் கிளிக் செய்யாதீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
மேலும், உங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட OTPஐ யாருடனும் பகிர வேண்டாம். மேலும், இது போன்ற ஒரு செய்தியை நீங்கள் பெற்றால், அதை வேறு யாருக்கும் அனுப்பவும் வேண்டாம்.