பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் லாபத்தைக் கொடுக்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மையோ, அதேபோல் சில பெயர் தெரியாத நிறுவன பங்குகள் கூரையைப் பிச்சிக்கிட்டு லாபத்தைக் கொடுக்கும்.
அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!
கிரெசாண்டா சொல்யூஷன்ஸ்
கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்குக் கடந்த ஆண்டில் கனவில் கூடி நினைத்துப் பார்க்க முடியாத லாபத்தை அளித்துள்ளது. கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் பங்குகள் ஜூன் 2, 2021 அன்று 0.64 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் ஜூன் 2, 2022 அன்று இந்நிறுவனப் பங்குகள் ரூ.35.4 இல் முடிவடைந்தது.
5,431 சதவீதம் லாபம்
அதாவது சரியாக ஒரு வருடக் காலகட்டத்தில் கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் பங்குகள் 5,431 சதவீதம் லாபத்தை அளிக்கக் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 7.61 சதவீதம் மட்டுமே அதிகரித்தது உள்ளது.
1 லட்சம் ரூபாய்
இதன் மூலம் ஓராண்டுக்கு முன்பு 1 லட்சம் ரூபாயை கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ரூ.55.31 லட்சமாக வளர்ந்திருக்கும்.
ரூ.37.15 விலை
இன்றைய வர்த்தக முடிவில் (June 3) Cressanda Solutions பங்கு விலை 4.94 சதவீதம் உயர்ந்து ரூ.37.15 ஆக உயர்ந்துள்ளது. மே 5 ஆம் தேதி இந்நிறுவனப் பங்குகள் 51.20 ரூபாய் வரையில் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாஸ் அதன் பின்பு தொடர்ந்து சரிந்து 25.30 ரூபாய் வரையில் சரிந்தது.
.1,480 கோடி சந்தை மதிப்பு
மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,480 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டின் முடிவுகள் படி 35,510 பொதுப் பங்குதாரர்கள் 99.90 சதவீத பங்குகளை அல்லது 30.32 கோடி பங்குகளை நிறுவனத்தில் வைத்திருந்தனர். இதில் ஒரு பங்குதாரர் மட்டும் 0.10 சதவீத பங்குகளை அல்லது 3.08 லட்சம் பங்குகளை வைத்துள்ளார்.
ஐடி சேவை நிறுவனங்கள்
கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகளுடன் கூடிய பெரிய வணிகத் திட்டங்களைப் புதுமைப்படுத்தவும், வடிவமைக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்யத் தமிழ் குட்ரிட்டன்ஸ் பரிந்துரைக்கவில்லை, சந்தையில் இருக்கும் கிரெசாண்டா சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் முயற்சி தான் இக்கட்டுரை.
Cressanda Solutions stock gave Rs 55 lakh profit with 1 lakh investment:penny stock multibagger
Cressanda Solutions stock gave Rs 55 lakh profit with 1 lakh investment:penny stock multibagger 1 லட்சம் முதலீட்டில் 55 லட்சம் லாபம்.. ஒரே வருடத்தில் லாபத்தை அள்ளிக்கொடுத்த ஐடி பங்கு..!