இந்தியாவின் முதல் மெட்டாவர்ஸ் பேங்கிங்: எப்படி செயல்படும் தெரியுமா?

நீங்கள் உங்கள் வங்கியின் கிளையை வீட்டை விட்டு வெளியேறாமல், வங்கி ஊழியர்களிடம் முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும், மற்ற விஷயங்களையும் விவாதிக்க முடியும் என்று எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் இருந்தபடியே பணப்பரிவர்த்தனை செய்யவும், வங்கித் தகவல்களை பெறவும் மற்றும் பல்வேறு வங்கி சலுகைகளை பெறவும் முடியும் என்று நினைத்ததுண்டா?

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை Kiya.ai அறிவித்துள்ளது. ஆம் இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் பேங்கிங் முறையை அறிமுகப்படுத்துவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டெஸ்லா ஊழியர்கள் பணிநீக்கம்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு..!

மெட்டாவர்ஸ்

மெட்டாவர்ஸ்

வங்கியில் மெட்டாவர்ஸ் முறை குறித்து பார்க்கும் முன் மெட்டாவர்ஸ் என்றால் என்ன? என்பதை பார்ப்போம். மெட்டாவர்ஸ் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம் என்பதாகும். இதனை பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். மெட்டாவர்ஸ் மூலம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு திருமணம் கூட நடந்தது என்பதை பார்த்தோம்.

உலகின் முதல் மெட்டாவர்ஸ் வங்கி

உலகின் முதல் மெட்டாவர்ஸ் வங்கி

உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ வங்கி, மெட்டாவர்ஸ் என்ற மெய்நிகர் உலகை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் மெட்டாவர்ஸ்
 

இந்தியாவில் மெட்டாவர்ஸ்

மெட்டாவர்ஸ் மூலம் இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் மேனேஜர் உள்பட அனைத்தையும் விர்ச்சுவலில் இணைக்கும் ஒரு முறை தான். எதிர்காலத்தில் வங்கிகள் இதன் மூலம் தான் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெட்டாவர்ஸ் மூலம் டிஜிட்டல் வங்கி அலகுகள், மொபைல்கள், மடிக்கணினிகள், VR ஹெட்செட்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்ட விபரங்களுக்காக பயன்படுத்த Kiyaverse உதவுகிறது.

மெய்நிகர் உலகம்

மெய்நிகர் உலகம்

இந்த இயங்குதளமானது வங்கிச் சேவைகளை நிஜ உலகத்திலிருந்து மெய்நிகர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும். அதேபோல் வங்கி மேலாளருடன் மெட்டாவர்ஸ் டிஜிட்டல் மூலம் வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு போர்ட்ஃபோலியோ பகுப்பாய்வு செய்ய, பண மேலாண்மை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மெட்டாவர்ஸ் எதிர்காலம்

மெட்டாவர்ஸ் எதிர்காலம்

அடுத்த பத்தாண்டுகளில் வங்கிகளில் மட்டுமின்றி பல துறைகளிலும் மெட்டாவர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் என்றும், வருங்காலம் மெட்டாவர்ஸ் உலகமாக மாறிவிடும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kiya.ai launches Kiyaverse, India’s first banking metaverse. Here’s how it will work

Kiya.ai launches Kiyaverse, India’s first banking metaverse. Here’s how it will work | இந்தியாவின் முதல் மெட்டாவர்ஸ் பேங்கிங்: எப்படி செயல்படும் தெரியுமா?

Story first published: Friday, June 3, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.