2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)-யில் இருக்கும் வைப்புத் தொகைக்கு 8.1 சதவீத வட்டி விகித வருமானத்தை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஓவில் முதலீடு செய்ய போகிறீர்களா? 5 புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
இந்த 8.1 சதவீத வட்டி விகிதம் என்பது 40 வருடங்களுக்கும் குறைவான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈபிஎப் வட்டி விகிதம்
இந்திய ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO-வில் இருக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கு வைப்பு நிதிக்கு 40 வருட குறைவான 8.1 சதவீத வைப்பு நிதியை மட்டுமே அளிக்க முடிவு செய்துள்ளது.
8.5 சதவீதத்திலிருந்து குறைப்பு
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம்
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட EPFO அலுவலக உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் EPF திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் வைப்பு தொகைக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கு 8.1 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்த பின்னர்த் தொழிலாளர் அமைச்சகம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுள்ளது.
EPFO அமைப்பு
இதன் மூலம் அரசு ஒப்புதல் அளித்துள்ள 8.1 சதவீத வட்டி வருமானத்தை EPFO அமைப்பு EPF கணக்குகளில் வரவு வைக்கும் பணிகளைத் துவங்கும். 8.1 சதவீத ஈபிஎப் வட்டி விகிதம் 1977-78ல் 8 சதவீதமாக இருந்தது, இதைத் தொடர்ந்து இப்போது 8.1 சதவீத வட்டி விகிதம் என்ற குறைவான அளவை கொண்டு உள்ளது.
Modi Govt approves 8.1 percent as interest rate for EPF deposits for 2021-2022
Modi Govt approves 8.1 percent as interest rate for EPF deposits for 2021-2022 ஈபிஎப் வட்டி விகிதம் அறிவிப்பு.. 40 வருட குறைவான வட்டி..!