கொழும்பு:இந்தியா, இலங்கையின் ‘சுவா செரியா ஆம்புலன்ஸ்’ சேவை நிறுவனத்திற்கு, 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. கடந்த, 2016ல் இந்தியா வழங்கிய 58 கோடி ரூபாய் நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது, மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதன்படி 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு:இந்தியா, இலங்கையின் ‘சுவா செரியா ஆம்புலன்ஸ்’ சேவை நிறுவனத்திற்கு, 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.கடந்த, 2016ல் இந்தியா வழங்கிய 58 கோடி ரூபாய்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.