தனியார் பஸ் தீப்பிடித்து 7 பேர் பலி

பெங்களூரு: தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 7 பயணிகள் கருகி பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், கமலாபுரா தாலுகாவில் நேற்று அதிகாலை தனியார் பஸ் மீது எதிரில் வந்த வாகனம் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த இரு குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கமலாபுரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கமலாபுரா போலீசார், விசாரணை நடத்தியதில், டெம்போ டிராவலர் வாகனத்தை தனியார் பஸ் டிரைவர் ஓவர் டேக் செய்ய முயற்சித்தபோது, இரு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த பொறியாளர் அர்ஜுனகுமார் (37), அவரது மனைவி சர்ராதேவி (32), அவரது குழந்தை பிவன் (4), அனிதா ராஜு (40), தீட்சித் (9), சிவக்குமார் (35), சிவகுமாரின் மனைவி ரவாலி (30) ஆகியோர் உயிரிழந்ததும், ஐதராபாத்தில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.