உக்ரைன் ரஷ்ய போரினால் ஆப்பிரிக்க நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி சால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடினிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதியை எளிதாக்குவது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் சோச்சியில் நடைப்பெற்ற கூட்டத்தில், நீடித்துவரும் போர் பதற்றத்தால் மறைமுகமான வழியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது ஆப்பிரிக்க நாடுகள் தான் என அதன் தலைவர் மேக்கி சால் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஆப்பிரிக்காவிற்கு 40%-க்கும் அதிகமான கோதுமை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தது, ஆனால் தற்போது அதன் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதுடன், மேசமான அறுவடை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய தட்டுப்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.
AFP
மேலும் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளது, மற்றும் பெரும்பாலானோர் பசியை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான செனகலின் அதிபராக இருக்கும் மேக்கி சால், புடினிடம் நடத்திய உரையாடலில், நமது நாடுகள் போர் நாடக அரங்கில் வெகு தொலைவில் இருந்தாலும், இந்த பொருளாதார நெருக்கடியால், இந்த மோதலால் ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆசியா மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்காவும் தான் வாதாடுவதாக மேக்கி சால் தெரிவித்துள்ளார்.
மூன்று மணி நேரம் நடைப்பெற்ற இந்த உரையாடலின் இறுதியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தானியங்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதியை எளிதாக்குவது குறித்து உறுதியளித்ததாக மேக்கி சால் தெரிவித்துள்ளார்.
அவர் வேறு எந்த முழுவிவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: சீனாவை விட அமெரிக்கா இவற்றில் அதிக வளர்ச்சியை பெரும்: ஜோ பைடன் பெருமிதம்
ஆனால் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபோல் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படலாம் என்று புடின் கூறினார் என மேக்கி சால் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.