சீனாவை விட அமெரிக்கா இவற்றில் அதிக வளர்ச்சியை பெரும்: ஜோ பைடன் பெருமிதம்


சீனாவின் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையான இன்று நாட்டின் சமீபத்திய வேலைத் தரவு வெளியீட்டை குறித்த கருத்தை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு வேகமாக வளரக் கூடும் மற்றும்  நாட்டின் பொருளாதாரம் ”உலகிலேயே வலிமையானது” என்பதை குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உக்ரைன் நெருக்கடியானது உலகப் பொருளாதாரத்தில் பெரும் நிச்சியமற்ற தன்மைக்கு வழிவகுத்து இருப்பதாக தெரிவித்த ஜோ பைடன், வலிமை நிலையில் இருந்து நாட்டின் பணவீக்கப் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

சீனாவை விட அமெரிக்கா இவற்றில் அதிக வளர்ச்சியை பெரும்: ஜோ பைடன் பெருமிதம்

கூடுதலாக ஊக்கமளிக்கும் தரவுகளின் வெளியீட்டிற்கு பிறகு நாட்டின் உற்பத்தி வளர்ந்து வருகிறது என்றும், அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க குடும்பங்களின் சம்பளங்களை அதிகரிப்பது மற்றும் அவர்களின் கடன்களை குறைப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சீனாவை விட அமெரிக்கா இவற்றில் அதிக வளர்ச்சியை பெரும்: ஜோ பைடன் பெருமிதம்

கூடுதல் செய்திகளுக்கு: தென்னிந்தியாவை உலுக்கிய சம்பவம்… காரில் சீரழிக்கப்பட்ட கொடூரம்: முக்கியஸ்தர் மகனுக்கும் தொடர்பு?

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து, ஏறக்குறைய 8.7 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி இருப்பதாகவும், இது நாட்டின் வேலையின்மையின் விகிதத்தின் எண்ணிக்கையை வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைத்து இருக்கிறது எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.