கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 12 பயணிகள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த பயணிகள் கலபுர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து, கலபுர்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இஷா பந்த் தெரிவிக்கையில்,
பிதார்-ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலையில் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள கமலாபூர் தாலுகாவின் புறநகரில் காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த பேருந்து கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரியுடன் மோதியதில், பேருந்து தீப்பிடித்து எரிந்து, பாலத்தின் மீது மோதியது. விபத்து நடந்தபோது பேருந்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இதில், பேருந்தில் 7 முதல் 8 பயணிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.