வாஷிங்டன்:
அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் திருடப்பட்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதி போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக வந்த கார் ஒன்று வேகமாக போலீசாரை கடக்க முயன்றது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, வேகமாக சென்ற அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனத்தில் மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்தவர் உயிரிழந்தார். அருகே சென்று பார்த்தபோது அந்த காரை ஓட்டி வந்தது 13 வயது சிறுவன் என தெரிய வந்தது.
அந்த காரில் மேலும் 2 சிறுவர்களும் இருந்துள்ளனர். அவர்கள் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.
சிறுவன் ஓட்டி வந்த கார்தான் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்ட வாகனம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.