ஐபிஎல் 15வது சீசன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆரம்பத்தில் குஜராத்தி யாரும் பெரிதாக மதிக்கவில்லை. ஏனெனில் அதிகமாக இளம் வீரர்களும், ஒருசில அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே இருந்தன.
மேலும் கேப்டன்சி அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்வு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் பாண்டியன் சிறப்பான அணுகுமுறையால் குஜராத் அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நான் ஹார்திக் பாண்டியாவை தோனியின் இளைய வெர்ஷன் சொல்வேன். இந்த வருடம் மிக சிறப்பானது. ஆனால் இன்னும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என தோன்றுகிறது.
வரும் காலங்களில் என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்கும். வலைப்பயிற்சியில் தோனிக்கு பந்து வீசும்போது, அவரிடம் ஆட்டத்தை குறித்தும் பேசியது உலகத்திலே மிகச் சிறந்தது என்பேன் ஆட்டத்தை கணிக்கும் தனது திறன் மிகுந்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
.