புதுச்சேரி: நம் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், மாநில அளவிலான வங்கியாளர் குழுத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு சுதந்திரமடைந்து 75ம் ஆண்டை கொண்டாடும் வகையில், மாநில அளவிலானவங்கியாளர் குழுத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதி அமைச்சகம் நடத்த உள்ளது. இதன் துவக்க விழா, வரும் 6ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டில்லியில் இருந்து துவக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு, புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி கருத்தரங்கு அறையில் நடக்கும் நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். வரும் 8ம் தேதி, வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் ஜிப்மர் வளாகத்தில் நடக்கிறது. இதில் வங்கிகளின் வைப்பு, கடன், காப்பீடு உள்ளிட்ட மக்கள் நலனுக்கானபல்வேறு திட்டங்கள் பற்றி கருத்தரங்கம் நடக்கிறது. தொடர்ந்து, 10ம் தேதி, நாட்டில் உள்ள சந்தை வாய்ப்புகள்குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement