இளையான்குடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிறிஸ்துவ திருச்சபை பாதிரியார் அருள்ஜீவா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டி புரம் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதில் சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுநர் அப்துல் மற்றும் பாதிரியார் அருள்ஜீவா ஆகியோர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் அங்க வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM