மும்பை: இந்திய கப்பல் படையை சேர்ந்த ஐஎன்எஸ் அக்சய் மற்றும் ஐஎன்எஸ் நிஷான்க் போர் கப்பல்கள் 32 ஆண்டுகால சேவைக்கு பிறகு விடைபெற்றன. கடற்படை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த போர் கப்பல்கள் ஒய்வு பெறும் விழா மும்பை கடற்படை தளத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. வீரர்கள் மரியாதைக்கு பிறகு இரண்டு போர் கப்பல்களிலிருந்த கொடிகள் இரக்கப்பட்டன.தொடர்ந்து ஏவுகணை போர்கப்பாலான அக்சய் பணிநீக்கம் செய்யப்பட்டது. கார்கில் போர் நடந்தபோது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அப்போது இரு கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக கப்பற்படை தலைமை தளபதி ஹரிகுமார் தெரிவித்தார். இரு போர் கப்பல்களும் பயிற்சி வீரர்கள் பலருக்கு பணி அனுபவங்களை கொடுத்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார்.