தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பதிப்பு, தற்போது 100 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் மற்றும் வார இறுதியில் பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர், மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.