ராஜபக்சக்களின் வீழ்ச்சியின் வேகம் பல சர்வதேச அவதானிகளிற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி
ராஜபக்சவினர் மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன.
அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம்.
கோவிட் வைரஸ் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானத்தையும் அவர்கள் இழந்தனர் அந்த வகையில் அவர்கள் துரதிஸ்டசாலிகள்.
இறுதியில் வாழ்க்கை செலவீனங்கள் நாளாந்தம் அதிகரித்ததும் எரிபொருள் பற்றாக்குறையும் இலங்கையர்கள் தாங்கிக்கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டன.
தொலைநோக்குடன் கூடிய தலைவர் இலங்கையில் இல்லை
பல தசாப்த கால நெருக்கடிகளிற்கு பின்னரும் சிங்கள பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான சுயாட்சி என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
அனைத்து மக்களிற்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது.
இதற்கப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்க கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை.
ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும்.
அரசாங்கங்கள் நிதியை செலவிடுவதை மாத்திரம் முன்னெடுக்க முடியாது,வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உறுதியான தனியார் துறையை கட்டியெழுப்பவேண்டும், வரவுசெலவுதிட்டத்தை சமப்படுத்தக்கூடிய வரிகளை அறிமுகப்படுத்தவேண்டும்.
ரணிலின் நேசக்கரம்
மிகவும் நெருக்கடியான தருணத்தில் எனது நண்பர் ரணிலிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்,ரணிலை விட தற்போதைய பொருளாதாரத்தை சிறப்பாக புரிந்துகொள்ளக்கூடிய – பேச்சுவார்த்தைகளில் சிறப்பாக ஈடுபடக்கூடிய வேறு ஒரு தற்போதைய இலங்கை தலைவரை நினைத்துப்பார்ப்பது கடினம்.
இதற்கு அப்பால் ரணில் ஒரு சிறந்த பண்பார்ந்த மனிதர்.
ஆனால் ராஜபக்சக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இன்னமும் நீண்டதூரம் செல்லவேண்டும்.
இலங்கையின் இளைஞர்களின் கரிசனைகளை செவிமடுப்பதற்கும்,நீண்ட கால தீர்வுகளிற்கு அவர்களின் பலத்தை உள்வாங்குவதற்கும் அவர்களை நோக்கி ரணில் விக்ரமசிங்க தனது நேசக்கரத்தை நீட்டவேண்டும்.