தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமியை, பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, 17 வயது 5 சிறுவர்கள் கொண்ட கும்பல், காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அவரின் தோழிக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் 18 வயதுக்கு கீழ் சுமார் 80 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி ஹோட்டலில் இருந்து சிறுமி வெளியேறிய போது, அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சிறுமியை காரில் தூக்கி கடத்தி சென்றது.
சிறுமி தன்னை விட்டுவிடும்படி அந்த கும்பலிடம் கதறி அழுத போதும், அந்த கும்பல் வலுக்கட்டாயமாக சிறுமியை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
இரண்டு மணி நேரம் கழித்து சிறுமியை அதே சொகுசு ஹோட்டலுக்கு முன்பாக காரில் இருந்து தள்ளிவிட்டு விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது.
வீடு திரும்பிய பின்னர், சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் உடலில் காயங்களும், அவர் சோர்வாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்க, புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில், தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலி மகன், ஐ.எம்.ஐ ஒவைசி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகன், தெலுங்கானா மாநில வஃக்போர்டு தலைவரின் மகன், உட்பட 5 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதில், 16 வயது சிறுவன் மற்றும் சகாபுதீன் மாலிக் ஆகிய 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் வழக்கில் அமைச்சர், எம்எல்ஏ மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், போலீசார் அவர்களை கைது செய்வதில் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 5 தனிப்படைகளை அமைத்து தலைமறைவாக உள்ள அமைச்சர், எம்எல்ஏ மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கோவாவுக்கு தப்பி ஓடி உள்ளதாக தெரியவந்துள்ளது.