சென்னை விமான நிலையத்தில் சுமார் 4.20 ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலமாக பயணிகள் போர்வையில் தொடர்ந்து தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் மூலமாகவும் இந்த சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்க கடத்தல் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர சோதனைகளை மேற் கொண்டிருந்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு விமானத்தில் இருந்து வந்த சந்தேகத்துக்கிடமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அவர்களின் உடல் மற்றும் அவர்களின் உடைமைகளில் மறைத்துவைத்து சுமார் 20 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 9.2 கிலோ 24 கேரட் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனுடைய மதிப்பு சுமார் 4.20 கோடி ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இருக்கக்கூடிய கடத்தல் கும்பல் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.