சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் குழந்தையை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர். அதேபோல், உங்கள் கண்களுக்கு யார் முதலில் தெரிவதை வைத்து குணாதிசயங்களை கண்டறிய உதவிகிறது.
இந்த படம் பல உளவியலாளர்களால் இன்ட்ரோவெர்ட் மனதில் இருக்கும் உண்மைகளை கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.
30 விநாடிகள் படத்தை பார்த்துவிட்டீர்களா? உங்கள் கண்ணுக்கு முதலில் தெரிந்தது ஏது? ஒரு ஆணா அல்லது பெண்ணா அல்லது ஏரி அருகில் தம்பதி நிற்பதா அல்லது குழந்தையா?
இதில், 30 விநாடிக்குள் குழந்தையை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது ஆகும். உலகிலே வெறும் 20 சதவீத பேர் மட்டுமே, 30 விநாடிக்குள் குழந்தையை கண்டுபிடித்திருக்கிறார்கள். கீழே உள்ள புகைப்படத்தில் குழந்தையை காணலாம்.
நீங்கள் முதலில் பார்த்தது வைத்து, உங்கள் குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம்.
ஏரி அருகே ஆண் அல்லது பெண்ணை மட்டுமே நீங்கள் பார்த்தால், நீங்கள் தனிமையில் இருப்பவர் என்பது அர்த்தம் . வேலை மீது கவனமான இருக்கும் நீங்கள், இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பவர். உங்கள் இலக்குகளை அடைய உங்கள் பக்கத்தில் யாரும் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் வெற்றியாளராக இருக்கிறீர்கள்.
ஏரி அருகே தம்பதியை பார்ப்பவர்கள், ஒரே நேரத்தில் கிரியேடிவ் மற்றும் லாஜிக்கல் மனதை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். ஏரிக்கரையில் நிற்கும் தம்பதிகள் உங்களுக்கு கற்பனை சிந்தனையும் இருப்பதைக் குறிக்கிறது. வலது மற்றும் இடது மூளையின் சமநிலை, வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான பார்வையை உங்களுக்குக் கொண்டுவருகிறது. நீங்கள், நட்பாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டீர்கள்.
குழந்தையை பார்த்துவிட்டீர்கள் என்றால், முதலில் வாழ்த்துகள் தான் சொல்லனும். உலகின் 20 சதவீத நபர்கள் மட்டுமே கண்டுபிடித்த பட்டியலில் நீங்களும் இணைந்துவீட்டீர்கள். வலது புற மூளையை உபயோகிக்கும் உண்மையான நபர். உங்கள் நேரத்தை தாண்டி பார்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. ஆறாவது அறிவின் திறனையும் முழுமையாக பெற்றிருக்கிறீர்கள்.
இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி சேலஞ்ச் செய்யுங்கள்.