எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.