டெல்லி: மின்சார கார்கள், ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து டிராக்டர், லாரிகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எத்தனால், மெத்தனால் போன்று எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாக மின்சாரம் இருக்கும். முன்பு மின் வாகனம் குறித்து கேள்வி எழுப்பிய மக்கள் தற்போது அவற்றை வாங்க காத்திருக்கின்றனர் எனவும் கூறினார்.