வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா , இஸ்ரேல் நாடுகளுக்கு செல்லும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்துள்ளது. தற்போது இரு நாடுகளிடையே சுமூக உறவு இல்லை.இந்நிலையில் அரசு முறை பயணமாக அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா , இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும். சவுதி அரேபியாவில் அந்நாட்டு மன்னர், மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரை பைடன் சந்தித்து பேச உள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது ஜூலை மாதம் வரை அதிபரின் எந்த வெளிநாட்டு பயண திட்டமும் இல்லை எனவும், சவுதி அரேபியா, இஸ்ரேல் பயணத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓபெக் அதிரடி முடிவு
ஜோ பைடன் சவுதி பயணம் செய்வதாக வந்த தகவலையொட்டி ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு, தனது எண்ணெய் உற்பத்தியை அதிகாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement