வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தனது முன் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் காங்.எம்.பி., கார்த்தி சிதம்பரம்.
காங்., மூத்த தலைவர் சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது, சீனாவை சேர்ந்த 263 பேருக்கு, சட்டவிரோதமாக விசா பெற்று தர, சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், கார்த்தி கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் முன் ஜாமின் மனு தள்ளுபடியானதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Advertisement